போலி நாணயத் தாள்களை வைத்திருந்த இருவர் கைது!

போலி நாணயத் தாள்களை வைத்திருந்த இருவர் ஹசலக, உடுதக பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹசலக பொலிஸ் அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடமிருந்து போலி 1000 ரூபா நாணயத்தாள்கள் மூன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில், ஹசலக பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய இரண்டு இளைஞர்களே கைதாகியுள்ளனர்.

மேலும், சந்தேக நபர்களை இன்று மஹியங்களை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.