பிரித்தானிய இளம்பெண்ணுக்கு அமெரிக்காவில் நுழைய தடை!

அமெரிக்காவிற்கு சென்ற போது கோகோயின் எடுத்துக்கொண்ட பிரித்தானிய பெண்ணுக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த இசபெல்லா பிரேசியர் (28 என்கிற தொலைக்காட்சி பிரபலம், அமெரிக்காவை சுற்றிப்பார்க்க வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருந்துள்ளார்.

தன்னுடைய கனவை நனவாக்குவதற்காக கடந்த 2017ம் ஆண்டு, தோழி ஒலிவியா குரா (26) உடன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு விமான நிலையத்தில் வைத்து அவரை கைது கைது செய்த பொலிஸார், 24 மணி நேரம் சிறையில் வைத்திருந்துவிட்டு பின்னர் பிரித்தானியாவிற்கு திரும்பி அனுப்பியிருந்தனர்.

இந்த நிலையில் அவருக்கு அமெரிக்காவில் நுழைய 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இசபெல்லா கூறியுள்ளார். ஆனால் இதுகுறித்து அமெரிக்க எல்லை அதிகாரிகள் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்த இசபெல்லா, நான் மற்ற நான்கு பெண்களுடன் சேர்த்து ஒரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். அது ஒரு பெரும் சித்ரவதை.

நான் ஒரு ஆடம்பரமான, வெள்ளை, பொன்னிற பெண் என்பதால் எனக்கு எதிராக நடந்துகொள்கிறார்களோ என பயந்தேன்.

என்னுடைய வீட்டை வாடகைக்கு ஒப்படைத்துவிட்டு தான் தோழியுடன் அமெரிக்காவிற்கு புறப்பட்டிருந்தேன். அங்கு என்னுடைய தொலைபேசி மற்றும் சாமான்கள் பறிமுதல் செய்யப்பட்டன. என்னுடைய உடல் முழுவதையும் சோதனை செய்தனர்.

அவர்கள் எப்போதாவது வகுப்பு A மருந்து எடுத்திருக்கிறார்களா என்று கேட்டார்கள் . நானும் எடுத்துக்கொண்டதாக ஒப்புக்கொண்டேன். அதன் பிறகு தான் என்னை கைது செய்தனர் என தெரிவித்துள்ளார்.