மந்திரவாதியுடன் உறவுக்கு மறுப்பு: மனைவியை கொன்ற கணவன்

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் மந்திரவாதியுடன் உறவுக்கு மறுத்த மனைவியை கொடூர கணவன் ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் அலிகட் பகுதியிலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 32 வயது பெண்மணியின் மரணத்தில் கணவனையும் மந்திரவாதியையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த வியாழனன்று மான்பால் என்பவரே தனது மனைவியை கொலை செய்துள்ளார். இவர்களது மனக் இச்சம்பவத்திற்கு நேரடி சாட்சி என கூறப்படுகிறது.

தமது தந்தை தாயாரை ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்வதை தாம் நேரில் பார்த்ததாக அந்த மகன் பொலிசாரிடம் தெரிவித்துள்ளான்.

தாயாரை காப்பாற்ற முயன்றதாகவும், ஆனால் தந்தை தம்மையும் கொலை செய்வதாக மிரட்டிய நிலையில் செய்வதறியாது நின்றதாக அவன் தெரிவித்துள்ளான்.

வியாழனன்று மனைவியிடம் மான்பால், ஆற்றங்கரைக்கு வர வேண்டும் என அழைத்துள்ளார். கூடவே சென்ற மனைவியை ஆற்றில் தள்ளிவிட்டுள்ளார் மான்பால்.

துர்காதாஸ் என்ற மந்திரவாதியுடன் உறவில் ஈடுபட மான்பால் தமது மனைவியை கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, மான்பால் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே கொல்லப்பட்ட பெண்மணியின் சகோதரர் அளித்த புகாரின்பேரில் பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

இதனையடுத்து மான்பால் மற்றும் மந்திரவாதி துர்காதாஸ் ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.