அரபு மொழிபெயர் பலகை: மன்னார் மக்கள் எதிர்ப்பு!

இலங்கையில் அரபு மொழியில் எழுதப்பட்டுள்ள பெயர் பலகைகள் மற்றும் இடங்களில் அவற்றை அகற்றுமாறு வர்த்தமானி அறிவித்தல், வெளியிடப்பட்டுள்ள நிலையில், மன்னாரில் அரபு மொழியில் உள்ள பெயர் பலகைகள் ஏன் அப்புறப்படுத்தப்படவில்லை என மன்னார் பிரஜைகள் குழு கேள்வி எழுப்பியுள்ளது.

மன்னாரில் இருந்து தலைமன்னார் வரையும் மன்னாரில் இருந்து சிலாவத்துறை ஊடாக வில்பத்து வரை செல்லும் வீதிகளில் அரபு மற்றும் ஏனைய மொழிகளில் எழுதப்பட்ட பெயர் பலகைகள் இருப்பதாக மன்னார் பிரஜைகள் குழு கூறியுள்ளது.

மன்னாரில் பல வீடமைப்புத் திட்டங்களில் இலங்கையின் பயன்படுத்தப்படும் மூன்று பொது மொழிகளில் பெயர் பலகைகள் இல்லை. அடுத்த சில தினங்களில் இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், துறைக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்படும் எனவும் மன்னார் பிரஜைகள் குழு குறிப்பிட்டுள்ளது.