காதல் சந்தியா சினிமாவிற்குள் நுழைந்தது எப்படி தெரியுமா?

பரத், சந்தியாவின் நடிப்பில் 2004 வெளியாகி பயங்கரமான ஹிட் அடித்த படம் காதல். இதன் வெற்றி எந்தளவிற்கு என்றால் இப்படத்தின் மூலம் அறிமுகமான சந்தியா இப்படத்திற்கு பிறகு காதல் சந்தியா என்றே அழைக்கப்பட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

அப்படிப்பட்ட இப்படத்தில் சந்தியா இணைந்தது எவ்வாறு என்பதை இப்படத்தில் உதவி இயக்குனராக பணிப்புரிந்த ’பசங்க’ சிவக்குமார் தற்போது கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், நான் படத்தில் சேர்ந்ததும் இயக்குனர் பாலாஜி சக்திவேல் எனக்கு கொடுத்த முதல் வேலை, ‘என்ன செய்வியோ, ஏது செய்வியோ தெரியாது. பத்தாவது படிக்கிற வயதில் எனக்கு ஒரு ஹீரோயின் வேண்டும். ஒவ்வொரு ஸ்கூல் வாசலிலும் போய் நில்லு, ஹீரோயினை கண்டுபிடிச்சு அழைத்து வா’ என்று சொல்லிவிட்டார். ஈவ்டீசிங் பிரச்சனை ரொம்ப அதிகமாக இருந்த சமயம் அது. அதனால், ஸ்கூல் ஸ்கூலாக போக வேண்டாம் என முடிவு செய்து, நான் வேற ஒரு ஐடியா பண்ணேன். சினிமா வாய்ப்பு தேடி ஆட்கள் நடமாடுகின்ற வடபழனி ஏரியாவில் உள்ள பியூட்டி பார்லர்கள் ஒன்றைவிடாமல் படையெடுத்தேன். அங்கே வருகின்ற நடிப்பு ஆசை உள்ள பெண்களை தேர்ந்தெடுக்கலாம் என்று ஐடியா. ஆனால் எதிர்பாராதவிதமாக ஒரு பியூட்டி பார்லரோட ஓனர் மகளுக்கே நடிப்பு ஆசை இருக்கு என்று எனக்கு தெரியவந்தது. அந்த பொண்ணுதான் சந்தியா என்றார், சிவக்குமார்.