தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் எல்.இ.டி பெய்ல்ஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நடுவர்களுக்கான வேலையை எளிதாக்கி விடுவதாக கூறப்படுகிறது.
எல்.இ.டி பெய்ல்ஸ் கடந்த 2015-ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. நடந்து வரும் உலக கோப்பை தொடரில் பந்து ஸ்டம்பைத் தாக்கியும் பெய்ல்ஸ் கீழே விழாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 14 வது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஒரு ரன்னில் இருக்கும்போது பும்ரா வீசிய பந்து ஸ்டம்பைத் தாக்கியது, பெய்ல்ஸ் கீழே விழாததால் அதிர்ஷ்டவசமாக அவர் அவுட் ஆகாமல் தப்பினார்.
இதுவரை மொத்தம் பத்து முறை பந்து ஸ்டம்பைத் தாக்கியது, பெய்ல்ஸ் கீழே விழவில்லை. இதனால் பந்து வீச்சாளர்களும், கேப்டன்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஸ்டம்பில் பந்து பந்து வந்து பட்டாலும் கீழே விழாததால் எல்.இ.டி பெய்ல்ஸ் நீக்க வேண்டும் என்று விராட் கோலி மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது. இதனால் கேப்டன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.