தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு தேவையான ஆவணங்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வரும் 21 ஆம் தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும். வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான இடங்களில் சேர்ந்து விடுவதாக புகார்கள் எழுந்தன.
இந்த வருடம் அவ்வாறு நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களுடன் அளிக்க வேண்டிய ஆவணங்களின் பட்டியல் என்ன என்பதை தமிழக அரசு அறிவித்துள்ளது.