திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றசாட்டில் முகாந்திரம் உள்ளது என சென்னை உயர் நீதி மன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக அதிமுகவில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு கட்சி மாறினார் செந்தில் பாலாஜி. இதனை தொடர்ந்து, அவர் அமமுகவில் இருந்து திடீரென விலகி திமுகவில் இணைந்தார்.
செந்தில்பாலாஜியின் வரவிற்கு திமுக அமோக பரிசுகளை வழங்கியதாக கூறப்பட்டது. இந்நிலையில், கரூர் திமுகவினருக்கு முக்கியத்துவம் குறைவதாக திமுகவில் சில பூசல்கள் எழுந்தது.
இந்நிலையில், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.95 லட்சம் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்த விசாரணையில், நீதிபதிகள் தற்பொழுது, குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாகவும், குற்றச்சாட்டில் முகாந்திரம் இருக்கும் நிலையில் இந்த வழக்கை ஏன் எதிர்கொள்ள கூடாது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இவ்வாறு, மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரிய செந்தில் பாலாஜி மனு மீது உயர்நீதிமன்றம் இத்தகைய கேள்வியை எழுப்பியுள்ளதால், செந்தில் பாலாஜிக்கு தண்டனை கிடைக்கப்பெற்றால் அவரது எம் எல் ஏ பதவி காலியாக வாய்பிருக்கிறது.