திமுகவின் முன்னாள் முதலமைச்சர் காலமானார்!!

புதுச்சேரி திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஜானகிராமன். இவர் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக பதவி வகித்த இவர், நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதியிலிருந்து 5 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.

மேலும் 1996 முதல் 2000 ஆம் ஆண்டு வரை புதுச்சேரி முதல்வராகவும் இருந்துள்ளார்.

உடல்நலக்குறைவால் பிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜானகிராமன் சிகிச்சை பலனின்றி காலமானார்.

புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சரின் உடலுக்கு தற்போதைய முதல்வர் நாராயணசாமி அஞ்சலி செலுத்தினார் மேலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.