விவாத மேடையில் நடந்த பரபரப்பு… இந்திய பெண் கைது!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸிடம் கேள்வி எழுப்பிய இந்திய பெண்ணை மேடையிலேயே கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலிஃபோர்னியா மாகாணத்தில் அமேசான் நிறுவனத்துக்கு சொந்தமான கோழிக்கறி மற்றும் டர்கி கறி விற்கும் பண்ணைகள் இயங்கி வருகின்றன.

இதில் நடக்கும் மிருக வதைகளை தடுக்க என்ன செய்ய போகிறீர்கள் என இந்திய வம்சாவளி பெண்மணி பிரியா ஷானி கேள்வி எழுப்பினார்.

அப்போது ஜெஃப் பெஸோஸ் பதிலளிக்காத நிலையில், அந்த பெண் மேடையில் ஏறி தொடர்ந்து கேள்வி கேட்டுள்ளார்.

இதனை அடுத்து நிகழ்ச்சியின் விதிமுறைகளை மீறியதாக கூறி அந்த பெண் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

இதனால் அந்த நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் கைது செய்யப்பட்ட பிரியா ஷானி மீது அத்துமீறி நுழைதல் கொள்ளை உள்ளிட்ட பிரிவுகளில் பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.