குழந்தையை கொன்றுவிட்டு… உயிர் பிரிய எவ்வளவு நேரம் ஆகும் என கூகுளில் தேடிய தாய்!

பிறந்த பிஞ்சு குழந்தை பெற்ற தாயே அடித்து கொலை செய்துவிட்டு, இறக்கும் வரை காத்திருந்த கொடூர சம்பவம் பிரித்தானியாவில் அரங்கேறியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த ஹன்னா கோப்லே (29) என்கிற பெண், தான் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதை பெற்றோரிடம் இருந்து மறைத்துள்ளார்.

ஏப்ரல் 26, 2011 என்று அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. வேகமாக கழிவறைக்கு சென்ற ஹன்னாவிற்கு குழந்தை பிறந்துள்ளது.

பிறந்ததும் அழ ஆரம்பித்ததால், ஏதோ ஒரு மர்ம பொருளை தொண்டையினுள் விட்டு சத்தம் வெளியில் வரவிடாமல் செய்துள்ளார்.

அதன்பிறகு கனமான ஒரு பொருளை கொண்டு குழந்தையின் தலை நரம்புகள் உடையும் அளவிற்கு கடுமையாக தாக்கியுள்ளார். மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிய குழந்தையை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு அடைந்தவர், உணவில்லாமல் குழந்தை இறக்க இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என கூகுளில் தேடி பார்த்துள்ளனர்.

இதற்கிடையில் 2 மணி நேரம் கழித்து அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஹன்னா குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பிடப்பட்டது. இந்த நிலையில் அவருக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறியுள்ளது.