கள்ளகாதலிக்கும், காதலிக்கும் பயம் காட்டி இருவரையும் ஒன்று சேரவைத்த ஆட்டோ டிரைவர்!

கோவை மாவட்டம் தாராபுரம் புதுக்கோட்டைமேடு பகுதியை சேர்ந்த 19 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் 29-ஆம் தேதியில் இருந்து காணாமல்போய்விட்டார். இதனையடுத்து அந்த பெண்ணின் தந்தை தாராபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த பெண்ணை தேடிவந்தனர்.

இந்த நிலையில், காணாமல் போன அந்த இளம்பெண் தாராபுரம் பேருந்து நிலையத்தில் ஒரு இளைஞருடன் நின்று கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணையும், அவருடன் இருந்த இளைஞரையும் பிடித்து காவல்நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். அப்போது அருகில் இருந்த மற்றோரு பெண் தன்னையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லுமாறு போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த 3 பேரையும் போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தாராபுரம் புதுக்கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் என்றும், இவருடன் வந்த 2 பெண்களும் அதே பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

அந்த ஆட்டோ டிரைவருக்கு அவர் வசிக்கும் பகுதியில், கணவரை பிரிந்து வாழ்ந்த 25 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஆனால் ஆட்டோ டிரைவர் அதே பகுதியை சேர்ந்த 19 வயது நிரம்பிய பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இதனையடுத்து இவரை பற்றிய உண்மை இரு பெண்களுக்கும் தெரியவந்தது. ஆனாலும் இருவரையும் அவர் சமாதானம் செய்து சமாளித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆட்டோ டிரைவர் இரண்டு பெண்களையும் ஏமாற்ற திட்டம்போட்டுள்ளார். இதனை அறிந்த 2 பெண்களும் ஒன்று சேர்ந்து ஒரே நேரத்தில் ஆ ட்டோ டிரைவரை திருமணம் செய்து கொண்டு, அவருடன் ஒன்றாக வாழலாம் என முடிவெடுத்து, ஆட்டோ டிரைவரிடம் தங்களது முடிவை தெரிவித்தனர். இந்தநிலையில் அவர்கள் 3 பேரும் வீட்டிற்கு தெரியாமல் பழனிக்கு சென்று ஒரு கோவில் முன்பு ஒரே நேரத்தில் 2 காதலிகளையும் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோவை செல்வதற்காக தாராபுரம் வந்தபோது போலீசாரிடம் மாற்றியுள்ளனர்.

இதனையடுத்து 2 பெண்களின் பெற்றோர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் இரண்டு பெண்களும் காதல் கணவரான ஆட்டோ டிரைவரருடன் தான் சேர்ந்து வாழ்வோம் என்று பிடிவாதம் பிடித்தனர். இறுதியில் போலீசார் 2 பெண்களையும், காதல் கணவரான ஆட்டோ டிவைருடன் அனுப்பி வைத்தனர்.