கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி.!

தெருவோரச் சிறார்களுக்கான முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்றது.

இந்தப் போட்டியை இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜான் மேஜரின் தலைமையிலான அமைப்பு நடத்தியது.

இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம், நேபாளம், காங்கோ, தான்சானியா, மொரிசியஸ் ஆகிய நாடுகளிலிருந்து தலா இரண்டு அணிகள் பங்கேற்றன. இவர்களுடன் செர்பியா அகதிகள் அணியும் போட்டியில் பங்கேற்றது.

அவ்வகையில், இந்தியாவிலிருந்து வடஇந்தியா, தென் னிந்தியா என இரண்டு அணிகள் பங்கேற்றன.

தென்னிந்திய அணியில் சென்னையைச் சேர்ந்த வி.பவுல்ராஜ், கே.சூர்யபிரகாஷ், ஏ.நாகலக்ஷ்மி, பி.மோனிஷா ஆகிய நால்வரும், மும்பையைச் சேர்ந்த மணிரத் னம், பவானி, இர்பான், ஷாமா ஆகியோரும் இடம்பெற்றனர்.

தென்னிந்திய அணிக்கு கருணாலயா என்ற தொண்டு நிறுவனம் பயிற்சியளித்து ஆதரவு வழங்கியது. இந்த அணிக்குச் சென்னையைச் சேர்ந்த லோகநாதன் பயிற்சியாளராக இருந்தார்.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்று உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை தென்னிந்திய அணி வென்றது.

இந்நிலையில், லண்டனிலிருந்து நாடு திரும்பிய சிறார்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கி கவுரவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

தெருவோர சிறார்களுக்கான அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளதாக இச்சிறார்களுக்குப் பயிற்சி அளித்த கருணாலயா தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.