என் நண்பருக்காக வருத்தம் அடைகிறேன் – கோலி!

உலக கோப்பை போட்டியில் தன்னுடைய முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி நாளை தென்ஆப்ரிக்க அணியை சந்திக்கிறது. இந்த போட்டிக்கு முன் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தென்னாபிரிக்க அணி வீரர்கள் காயத்தில் விலகி இருந்தாலும் அவர்களை நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டோம், அவர்கள் மிகவும் பலமான அணி, பலமான வீரர்களை கொண்ட அணியாக இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

மேலும் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளது ஒரு நண்பனாக எனக்கு வருத்தம் அளிப்பதாகவும், அவர் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் விரும்புவதாகவும் கோலி தெரிவித்துள்ளார்.

அதேபோல இந்திய அணியில் தோள்பட்டை காயம் காரணமாக பயிற்சி ஆட்டங்களில் கலந்து கொள்ளாத கேதர் ஜாதவ் உடற் தகுதியை பெற்று விட்டார் எனவும், நாளைய போட்டியில் கலந்து கொள்வதற்கு தயாராக இருக்கிறார் எனவும் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்திய அணியில் இருந்த காயம் என்ற பயமானது முழுவதுமாக நீங்கி உள்ளது.