ரிசாத் – அஸாத் – ஹிஸ்புல்லா வீடு செல்லா விட்டால் நாடு முழுவதும் திருவிழா! வெளியானது எச்சரிக்கை

அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், மேற்கு ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை பதவி நீக்கம் செய்வதற்கே நாளை நண்பகல் 12 மணிவரை இந்த காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் திருவிழாவை காண முடியும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுசெயலாளர் ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று -02- கண்டி தலதா மாளிகை வளாகத்திற்கு விஜயம் செய்த அவர் ரத்தன தேரர் அவர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு வெளியிட்ட போதே இதனை குறிப்பிட்டார்.

தங்களுக்குள் பல்வேறுபட்ட கருத்து வேறுபாடுகள் இருப்பினும் முஸ்லிம் பிரச்சினையில் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும் என அவர் அங்கு குறிப்பிட்டார்.

ரதனதேரரரின் கோரிக்கைக்கு செவிசாய்த்து குறித்த அரசியல்வாதிகள் பதவி நீக்கப்படவேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்.

என கோரியுள்ள அவர் நாளை 12 மணி வரை காலக்கெடு வழங்குவதாகவும் இல்லையென்றால் நாடு முழுவதும் திருவிழாவை காண முடியும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுசெயலாளர் ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறை சென்ற தமக்கு மரணம் ஒரு பொருட்டல்ல என அவர் குறிப்பிட்டார்.