மக்களின் விருப்பத்திற்கு மாறாக இதை செய்யமாட்டோம்?நிர்மலா சீதாராமன் உறுதி!

தேசிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை வரைவு அறிக்கையை கஸ்தூரி ரங்கன் குழு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் ஒப்படைத்தது. அதில் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நடுநிலை வகுப்புகளில் மும்மொழிக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுயிருக்கிறது.

மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்வி கொள்கைக்கு தமிழகதில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், சமூக வலைதளங்களிலும் பெரும் எதிர்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், மும்மொழி கல்வி குறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே கஸ்தூரி ரங்கன் கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும், தொன்மையான தமிழ் மொழியை போற்றி வளர்பதற்கு மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும் என தெரிவித்துள்ளார்.