இந்தியாவின் கேரள மாநிலத்தில் இளைஞர் ஒருவர் உடல் முழுவதும் படரும் விசித்திர நோயால் அவதிப்பட்டுவருகிறார்.
கேரளாவின் ஆலப்புழா பகுதியில் குடியிருக்கும் பிரபுலால் என்ற இளைஞரே உலகில் 10 லட்சம் பேரில் ஒருவருக்கு ஏற்படும் இந்த அபூர்வ நோயால் அவதிப்பட்டு வருகிறார்.
முகம், வயிறு மற்று மார்பு என குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் முதலில் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் அது தற்போது உடலின் 80 விழுக்காடு பகுதியிலும் வியாபித்து தீரா வலியை அளித்து வருகிறது.
வலது காது முறம் போன்று வளர்ந்து பின்னர் மரம் போன்று இறுக்கமடைந்துள்ளது. அவரது உடலின் பெரும்பகுதி தற்போது மரம் போன்று இறுக்கமாகவே காணப்படுகிறது.
ஆலப்புழா மருத்துவக் கல்லூரியில் பல ஆண்டுகள் சிகிச்சை மேற்கொண்டும் எந்த பலனும் இல்லை என தெரியவந்த நிலையில்,
தற்போது குடியிருப்பில் வைத்தே சிகிச்சை எடுத்துக் கொள்வதாக பிரபுலாலின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.