இங்கிலாந்தின் ஷெபீல்ட் பகுதியை சேர்ந்த 27 வயதான ஹெய்டி பார்க்கர், தன்னுடைய கல்லூரி காலத்தில் அறையில் இருந்த சலவை இயந்திரத்தை எப்படி உபயோகிப்பது என தெரியாமல் முழித்துள்ளார்.
உடனே, அந்த வீட்டில் இதற்கு முன் வாடகைக்கு இருந்த எட் சேவிட் என்பவரின் உதவியை நாடியுள்ளார்.
ஹெய்டி பார்க்கர் அழகில் மயங்கிய எட் சேவிட் உதவுவதற்காக முன் வந்துள்ளார். அதே போல வெவ்வேறு காரணங்களுக்காக மேலும் இரண்டு முறை சந்தித்துள்ளனர்.
இந்த சமயத்தில் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது. 2015ம் ஆண்டு திருமண நிச்சயம் செய்துகொண்ட இருவரும், தனியாக அறை எடுத்து ஒரே வீட்டில் தங்கி வந்தனர்.
ஒருநாள் ஹோட்டலில் உணவருந்தி கொண்டிருந்த போது, எட் சேவிட் தாய் ஒரு புகைப்படத்தை அனுப்பியுள்ளார். அதில், 1997-ம் ஆண்டு நாம் துருக்கிக்கு சுற்றுலா சென்றிருந்தோம்.
அங்கிருந்த குழந்தைகள் கிளப்பில் உனக்கு ஒரு ஆண் தோழன் கிடைத்தான். அவன் பெயர் கூட, ஹெய்டி பார்க்கர் என குறிப்பிட்டிருந்தார்.
அந்த புகைப்படத்தை பார்த்த, எட் சேவிட் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் துருக்கி சென்றது. அங்கு எனக்கு ஒரு தோழன் கிடைத்தது, எதுவுமே எனக்கு நியாபகம் இல்லை.
அந்த புகைப்படத்தை என்னுடைய காதலனிடம் காட்டியபோது, அது நான்தான் எனக்கூறினார். இதனை கேட்டதும் மகிழ்ச்சியில் முகத்தை கவிழ்த்துக்கொண்டேன். இருவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.
அதனை என்னால் நம்பவே முடியவில்லை. இத்தனை வருடங்கள் கழித்து நாங்கள் எதார்ததமாக சந்தித்தோம்.
அதன்பிறகு எங்களுடைய திருமண பத்திரிக்கையில் சிறுவயதில் எடுத்த புகைப்படத்தையும், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒன்றாக பதிந்தோம் என தெரிவித்துள்ளார்.






