இந்தியாவில் கிரிக்கெட் மற்றும் சினிமா துறையை பிரிப்பது கடினம். இந்த இரண்டு துறைகளில் இருந்தும் பல நட்சத்திரங்கள் காதல் திருமணம் செய்துள்ளனர்.
தற்போது இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தற்போது மற்றொரு கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் பாலிவுட் நடிகை சோனல் சவுகான் என்பவரை காதலித்து வருவதாக செய்திகள் பரவியது.
இது பற்றி பேட்டியளித்துள்ள நடிகை, “எங்களை ஒருவருக்கொருவர் நன்றாக தெரியும். எங்கள் துறைகளில் நுழையும் முன்பே பழக்கம். டின்னர் ஒன்றாக சென்றுள்ளோம். ஆனால் காதலிப்பதாக வரும் செய்தி உண்மையில்லை” என கூறியுள்ளார்.