முன்னணி நடிகர் குடும்பத்தை துயரத்தில் ஆழ்த்திய மரணம்.!

ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜய் தேவ்கன். இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் முன்னணி நடிகையான கஜோலை திருமணம் செய்து கொண்டார்.

பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் தந்தை வீருதேவ்கன். இவர் பாலிவுட் சினிமாவில் 100க்கும் மேலான படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி உள்ளார்.மேலும் 1999 ஆம் ஆண்டு ஹிந்துஸ்தான் கி கசம் என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். அதில் நடிகர் அஜய் தேவ்கன், அமிதாப்பச்சன், மனிஷா கொய்ராலா,சுஷ்மிதாசென் போன்ற முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் வீரு தேவ்கன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

இதனை தொடர்ந்து அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 6 மணி அளவில் நடைபெறஉள்ளது இந்நிலையில் இவரது மறைவு பாலிவுட் சினிமாவில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.