முஸ்லிம்களாக மதம் மாற்றப்பட்டுள்ள முப்பதாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள்! அம்பலப்படுத்தும் ஞானசார தேரர்

முப்பதாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள், முஸ்லிம்களாக மதம் மாற்றப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி – முஸ்லிம்கள், சிங்கள பெயர்களில் தம்மை அடையாளப்படுத்துவதாகக் கூறப்படுகிறதே?

பதில் – ஆபத்து வந்தால் நாய் ஊளையிடும். இந்த திருடர்களை பார்த்தும் நாய்கள் ஊளையிடுகின்றன. நாய்க்கு தெரிந்தவை மனிதனுக்கு தெரிவதில்லையா என கேட்கிறேன்.

முப்பதாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள், முஸ்லிம்களாக மதம் மாற்றப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற என்பதாயிரத்திற்கும் அதிகமான சிங்களவர்கள், முஸ்லிம்களாகியுள்ளனர்.

கடந்த ஐந்து வருடங்களில் ஏழாயிரத்திற்கும் அதிகமான சிங்கள யுவதிகள் முஸ்லிம்களாக்கப்பட்டுள்ளனர். குருணாகல் நகர எல்லையில் இவ்வாறு ஆயிரத்திற்கும் அதிகமானோர் மதம் மாறியுள்ளனர்.

இவற்றைக் கூறும் போதே சிலர் என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது கலாச்சார சீரழிப்பாகும். இதனை நாமே நிறுத்த வேண்டும். நான் தேசியத்துக்கான கடமையை நிறைவேற்றுவேன்.

அனைவரும் உடனடியாக தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.