கொளுந்தனுடன் உல்லாசம்.! மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்து., வாக்குமூலத்தில் கதறிய கணவன்.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூரை அடுத்துள்ள ஐகுந்தம் அருகேயிருக்கும் வெப்பாலம்பட்டி பகுதியை சார்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 31). இவர் கட்டிட தொழில் மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் சூழலில்., இவருக்கு கஸ்தூரி என்ற 28 வயதுடைய மனைவியும்., இவர்கள் இருவருக்கும் 8 வயதுடைய அரசு மற்றும் 5 வயதுடைய தமிழ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

கோவிந்தராஜுடைய பெற்றோர்கள் அங்குள்ள கிட்டம்பட்டியில் வசித்து வரும் சூழலில்., பெற்றோர்களுடன் கோவிந்தராஜின் சகோதரரான சின்னசாமியும் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில்., கஸ்தூரிக்கும் – சின்னசாமிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது கள்ளக்காதலாக மாறவே., இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இந்த தகவலை அறிந்த கோவிந்தராஜ் தனது மனைவி மற்றும் சகோதரரை பல முறை கண்டித்தும்., இருவரும் இதனை கண்டு கொள்ளாது உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த நேரத்தில்., இது குறித்த பிரச்சனை நடந்து வந்த நிலயில்., ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் கஸ்தூரியை அரிவாளால் வெட்டவே., இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த கஸ்தூரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இவர் அலறிய அலறலை கேட்டு அதிர்ச்சியான அக்கம்பக்கத்தினர் இல்லத்திற்கு வந்த பார்த்த சமயத்தில்., அவர் பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., கஸ்தூரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சமயத்தில்., மனைவியை கொலை செய்த கோவிந்தராஜ் காவல் நிலையத்தில் சரணடையவே., இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட சமயத்தில் அவர் தெரிவித்தாவது., எனது மனைவி கஸ்தூரிக்கும் – எனது சகோதரர் சின்னசாமிக்கும் இடையே முறையற்ற பழக்கமானது ஏற்பட்டது. இதனை கண்டித்து அவர்களிடம் பல முறை கூறிய நிலையில்., அவர்கள் கேட்காததால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில்., நேற்றும் வழக்கம்போல ஏற்பட்ட தகராறை அடுத்து., ஆத்திரமடைந்த நான் எனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்தேன். இதனால் அவர் துடிதுடித்து உயிரிழந்தார். எனக்கு பின்னர் எனது குடும்பத்தை பார்த்து கொள்ள எனது சகோதரன் இருப்பான் என்று எண்ணிய நிலையில்., அவனாலேயே எனது குடும்பம் சிதைக்கப்பட்டது. ஆத்திரத்தில் செய்த கொலையால் எனது குழந்தைகள் என்ன செய்வார்கள் என்று தற்போது கதறியழுகிறேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.