கால்களின் உதவியுடன் அசத்தும் ஆடை வடிவமைப்பாளர்!

மெக்சிக்கோவைச் சேர்ந்த வடிவமைப்பாளர் எட்ரியானா மசியாஸ் கால்களைக் கொண்டு ஆடைகளை வடிவமைத்து அசத்தி வருகின்றார்.

கரங்கள் இல்லாததால் எட்ரியானா மசியாஸிற்கு வேலை கிடைக்கவில்லை. அதை நினைத்து அவர் துவண்டு போகவில்லை.

கால்களைப் பயன்படுத்தி புதிய முயற்சியில் இறங்கினார், அவர், ஆடைகளை வடிவமைத்து அசத்தி வருகின்றார்.

கடந்த மாதம் நடைபெற்ற Fashion Week Mexico நிகழ்ச்சியில், அவர் தமது கைவண்ணத்தில் உருவாக்கிய ஆடைகளை வெளியிட்டார். உடற்குறையுள்ள அழகிகள் அந்த ஆடைகளில் பவனி வந்தனர்.