இலங்கை தமிழர்கள் இனப்படுகொலை.. திமுக செயல்பட்ட விதம்: ஸ்டாலினுக்கு வந்த கடிதம்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிக தொகுதிகளை வென்று அபார வெற்றிப்பெற வழிநடத்திய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, இலங்கை தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் சி.வி.விக்னேஷ்வரன் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில், அபார வெற்றிக்கு வழிநடத்திய ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். திமுக உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் மகத்தான பணிகளை மேற்கொள்ளும் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது திமுக செயல்பட்டவிதம் தற்போதும் இலங்கை தமிழ் மக்களிடையே கசப்புணர்வாக இருப்பதை நீங்கள் அறிவீர்கள் , இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்கள் என நம்புகிறேன்.

தமிழகத்துக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கும் இடையே உள்ள தொடர்பை வலுப்படுத்த இலங்கைக்கு ஸ்டாலின் விஜயம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என சி.வி.விக்னேஷ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.