தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமாக இருப்பவர் பிரியங்கா. இவர் இதுமட்டுமின்றி அவர் விஜய் தொலைக்காட்சியில் பல முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். தொகுப்பாளினி பிரியங்காவுக்காகவே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.
அதற்கு முக்கிய காரணம், பிரியங்கா தற்பெருமை இல்லாமல் பேசுவார். அவரை, அவரே கிண்டல் செய்துகொள்வார். மேலும் அந்த நிகழ்ச்சியில் அவரை யாராவது அதிகப்படியாக கிண்டல் செய்தால், முகம் சுழிக்காமல் சிரித்தே சமாளித்து கிண்டல் செய்துவிடுவார்.
மேலும் சற்று உடல் எடை சற்று உடல் எடை அதிகமாகி, பெருத்த உடம்புடன் காணப்படும் பிரியங்காவை அனைவரும் கலாய்த்த நிலையிலும் அவர் அதனை பொருட்படுத்தவே மாட்டார். மேலும் சாப்பாடு பிரியர் என அனைவரும் அவரை கிண்டல் செய்யும் நிலையில் எடை பற்றியும் கவலைப்படாமல் அடித்து பிடித்துக்கொண்டு ப்ரியங்கா சாப்பிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில் பிரியங்கா,நிஷா,பாலாஜி, மகேஷ் மற்றும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவரும் உள்ளனர், அவர்கள் அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்து சண்டை போட்டுக்கொண்டு ப்ரியங்கா சாப்பிடுகிறார் ,இந்நிலையில் பிரியங்காவின் சின்ன பிள்ளைத்தனமான இச்செயலைக் கண்டு ரசிகர்கள் உற்சாகத்துடன் ரசித்து வருகின்றனர்.






