இன்றைய காலக்கட்டத்தில் கூந்தல் உதிர்வு என்பது எல்லோரும் சந்திக்க கூடிய மிகப் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.
கண்டிப்பாக இந்த ஒரு பொருளை மட்டும் கையில் எடுங்கள். இந்த எண்ணெய்யை கொண்டு தினமும் மசாஜ் செய்தாலே போதும் ஆரோக்கியமான கூந்தலை நீங்கள் பெற இயலும்.
கருஞ்சீரக எண்ணெய் தயார் செய்வது எப்படி?
தயாரிக்கும் முறை தேவையான பொருட்கள்
- 2 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரக எண்ணெய்
- 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 11/2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்
- 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய்
- 1 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ்
- 1 டேபிள் ஸ்பூன் தேன்
பயன்படுத்தும் முறை
ஒரு சிறிய பெளலில் கருஞ்சீரக விதைகள், தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில் இவற்றை நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனுடன் சிறுதளவு விளக்கெண்ணெய் சேருங்கள்.
இதன் அடர்த்தி கொஞ்சம் அதிகம் என்பதால் இந்த எண்ணெய் சற்று பிசு பிசுப்பு தன்மையுடன் காணப்படும்.
ஆனால் கூந்தலுக்கு மிகவும் நல்லது. அடுத்து கொஞ்சம் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும் இந்த எண்ணெய்யை உங்கள் விரல்களில் எடுத்து தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யவும்.
20 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து விட்டு 10-15 நிமிடங்கள் வைத்து இருந்து பிறகு எப்பொழுதும் போல் கூந்தலை சாம்பு கொண்டு அலசுங்கள். இந்த மசாஜ்யை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.