திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மனைவி நித்யகமலா, பாண்டியனின் மனைவி அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்துவந்துள்ளார். இவர்களுக்கு லத்திகாஸ்ரீ என்ற 5 வயது மகள் இருந்துள்ளார்.
தற்போது கோடை விடுமுறை என்பதால் பள்ளி குழந்தைகள் அனைவரும் வீட்டிலே இருந்து வருவது வழக்கம். தற்போது தமிழகத்தில் அடித்து கொளுத்தும் வெயிலில் குழந்தைகளால் வெளியில் வெயிலில் சென்று விளையாட முடியாததால் வீட்டிற்குள்ளேயே இருந்து பொழுது போக்குகின்றனர்.
இந்தநிலையில் தற்பொழுது குழந்தைகளின் ஒரே பொழுதுபோக்கு டிவி பார்ப்பது மட்டுமே. அதேபோல சிறுமி லத்திகாஸ்ரீ தனது வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தார். விடுமுறை என்பதால் வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து டிவி பார்த்துள்ளார். நித்யகலா அவரை அழைத்தும், அச்சிறுமி வராமல் தொடர்ந்து டிவி பார்த்துள்ளார்.
லத்திகாஸ்ரீ தொடர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருப்பதால் ஆத்திரம் அடைந்த அவரது தாயார் சிறுமியை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் அதற்கு தண்டனையாக கொளுத்தும் வெயிலில் வீட்டின் வெளியே நிற்க வைத்துள்ளார். இதனால் சோர்ந்து போன சிறுமி மயங்கி விழுந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு லத்திகா ஸ்ரீயை, நித்யகலா அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே லத்திகா ஸ்ரீ உயிரிழந்தார். இதனால் உறவினர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கினர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சிறுமியின் தாய் நித்ய கமலாவை கைது செய்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






