அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் கமல் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்துபோது மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல். இந்த பிரச்சாரத்தில் பேசிய அவர், “முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை
சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாத்ராம் கோட்சே. அங்கு துவங்குகிறது அது. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக இருக்க வேண்டும் என்பது தான் நல்ல இந்தியனின் ஆசை. நான் நல்ல இந்தியன் என்பதை மார் தட்டி சொல்வேன். மனிதர்கள் மீது நான் நேசத்தை காட்டுகிறேன். இதனால் எங்கள் மக்கள் நீதி மையத்திற்கு நல்ல எதிர்காலம் உள்ளது” என சர்ச்சை கூறிய வகையில் கமல் பேசினார்.
கமல்ஹாசனின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையானது , கமலஹாசனின் இந்த பேச்சுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகை கஸ்தூரி தொடர்ந்து அரசியல் மற்றும் சமூகம் குறித்த கருத்துக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், “கமல் 30 வினாடி பேசியதை 3 நாளா பேசிக்கிட்டுருக்கோமே…பேசியே ஒரு படத்தை சூப்பர் ஹிட் ஆக்கினவங்க இப்போ கமல் பேசுனதை நாடு முழுக்க பிரபலப்படுத்திட்டாங்க….
இதை விட அவருக்கு சூப்பர் பிரச்சாரம் அமையுமா? நான் நினைக்கிறேன் நான்கு சட்டமன்ற தொகுதியிலும் நினைச்சதை விட அதிக ஓட்டு வாங்குவாறு பாருங்க”! என்று அவர் கமலுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார்.
கமல் 30 வினாடி பேசுனதை 3 நாளா பேசிக்கிட்டுருக்கோமே…பேசியே ஒரு படத்தை சூப்பர்ஹிட் ஆக்கினவங்க இப்போ Kamal பேசுனதை நாடு முழுக்க பிரபலப்படுத்திட்டாங்க…. இதைவிட ஒரு சூப்பர் பிரச்சாரம் அவருக்கு அமையுமா? I think… 4 தொகுதியில நினைச்சதை விட அதிகமாவே வோட்டு வாங்குவாரு பாருங்க !
— Kasturi Shankar (@KasthuriShankar) May 16, 2019