ஆறு வயது பிரித்தானிய சிறுமியை கொடூரமாக வன்புணர்வு செய்து சித்திரவதை செய்து கொலை செய்த 17 வயது சிறுவனுக்கு ஜாமீனுக்கு விண்ணப்பிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ள சம்பவம் சிறுமியின் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அலீஷா மெக்பைல் என்னும் அந்த ஆறு வயது சிறுமியை மிக நீண்ட நேரம் சித்திரவதை செய்து அவள் உடலில் 117 காயங்களை ஏற்படுத்தி, கொடூரமான முறையில் வன்புணர்வு செய்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டான் 17 வயது ஆரோன் காம்பெல் என்பவன்.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவன் குறைந்தது 27 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டும் என நீதிபதி இந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டார்.
அலீஷாவை அனுபவித்து வன்புணர்வு செய்ததாகவும், கொலையை ரசித்து செய்ததாகவும் ஆரோன் ஒப்புக்கொண்டதாக அவனது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
தூங்கிக் கொண்டிருந்த அலீஷாவை தூக்கிச் சென்ற ஆரோன், அவளை வன்புணர்வு செய்து கொலை செய்தான்.
பினார் அலீஷாவின் உடல் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கேட்க இயலாமல் பொலிஸ் அதிகாரி ஒருவர் கதறி கண்ணீர் விட்டார்.
அவ்வளவு கோரமான ஒரு குற்றம் புரிந்தும், ஜாமீனில் வர இயலாது என அனைவரும் நம்பிக் கொண்டிருந்த நிலையில், ஆரோனுக்கு மேல் முறையீடு கோரி விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவலை வெளியிட்ட நீதிமன்ற செய்தி தொடர்பாளர் ஒருவர், ஆரோன் ஆகஸ்டு மாதம் 7ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக கொண்டு வரப்பட இருப்பதாக தெரிவித்தார்.






