தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை வாலிபர் முக்கிய புள்ளியாக செயல்பட்டாரா?

இலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலினால் கைது செய்யப்பட்டுள்ள இன்ஜினியர் மீது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய உளவுத்துறை அமைப்பு அவருக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று ஹோட்டல் மற்றும் தேவாலயங்களில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலினால் 250-க்கும் மேற்பட்டோர் பரிதாபமான இறந்த நிலையில், இந்த தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு தொடர்பிருப்பதாக கூறி இலங்கையை சேர்ந்த ஆதில் அகமத் என்ற 24 வயது ஷாப்ட்வேர் இன்ஜினியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தாக்குதல் நடந்த அடுத்த நான்கு தினங்களிலே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட அந்த நபர் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், ஆதில் அகமத் தன்னுடைய LinkedIn-இல் இன்ஜினியர், புரோகிராமர், வெப்டிசைனர், கம்பூயூட்டர் சயின்சில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளதாகவும், பிரிட்டன் பல்கழைகலகத்தில் படித்ததாகவும் குறிப்பிட்டுள்ளான்.

கொலும்புவின் அலுத்கமாவில் இருக்கும் இவருடைய தந்தை அமீஷ், என் மகன் இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கமாட்டான் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அதிகாரிகள் நோட்டமிட்டதில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இரண்டு குற்றப்பத்திரிக்கைகளை அவரைப் பற்றி தாக்கல் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி இலங்கையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் தொழில்நுட்ப மற்றும் போக்குவரத்து உதவிகள் இவர் செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.