சருமத்தையும்., தலை முடியையும் பளபளப்பாக மாற்றுவதற்கு??

இன்றுள்ள காலநிலையில் பலதரப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்து வரும் நாம் நமது அழகை பராமரிப்பதில் அவ்வப்போது சில முயற்சிகளை செய்து வருகிறோம். அந்த வகையில்., நமது அழகை பராமரிப்பதற்கு அதிகளவு செலவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. எளிய முறையிலும் நமது அழகை பராமரிக்கலாம்.

தினமும் நாம் உபயோகம் செய்யும் தயிரை கீழ்காணும் பொருட்களின் சேர்த்து தடவி வந்தால் நமது சருமமானது அழகு மற்றும் மேன்மையடையும். இதன் மூலமாக நாம் எய்ய முறையில் நமது அழகை பராமரிக்கலாம்.

நமது தலை முடியாந்த அதிகளவு வறட்சியுடன் இருக்கும் பட்சத்தில்., தயிரை தலை முடியின் மீது தேய்த்து பின்னர் குளித்து வந்தால் நமது சருமமும் அழகாகும். இதுமட்டுமல்லாது சருமத்தில் இருக்கும் வறட்சியானது உடனடியாக நீங்கும்.

தயிருடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்றாக கலக்கி தலை முடியில் தேய்த்து குளித்து வந்தால் தலை முடியானது நல்ல மென்மையுடனும்., பளபளப்பாகவும் இருக்கும். இதுமட்டுமல்லாது தலை முடியானது நன்றாக வளரும்.

மஞ்சளை சிறிதளவு எடுத்து கொண்டு தயிருடன் சேர்த்து முகத்தில் தேய்த்து குளித்து வந்தால் வெயில் காரணமாக ஏற்படும் சரும வறட்சி பிரச்சனையானது உடனடியாக நீங்கும். இதனை உடலுக்கும் மேற்கொள்ளலாம்.

அதிகளவு முகப்பரு பிரச்சனையின் காரணமாக அவதியுறும் நபர்கள் கடலைமாவுடன் தயிரை சேர்த்து வாரத்திற்கு இரு முறை இந்த முறையை மேற்கொண்டால் முகப்பரு பிரச்சனையானது நீங்கும்.