ஐபிஎல் மோகம்… மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்த கணவன்!

மேற்குவங்க மாநிலத்தில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக, மனைவியின் வாயில் கணவன் ஆசிட் ஊற்றி கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.

மேற்கு வாங்க மாநிலத்தை சேர்ந்த அர்பதா (32) என்பவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக சுவேந்து தாஸ்குப்தா என்பவரை திருமணம் செய்துள்ளார்.

சுவேந்து தாஸ்குப்தா ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபடும் பழக்கம் கொண்டவர். இதனை வெறுத்த அர்பதா, கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரரமடைந்த சுவேந்து தாஸ்குப்தா, தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் 4 பேருடன் சேர்ந்து அர்பதாவின் வாயில் ஆசிட்டை ஊற்றியுள்ளனர்.

மறுநாள் காலையில் தன்னுடைய தாத்தாவிற்கு போன் செய்த அர்பதாவின் மகள், அம்மா சுயநினைவில்லாமல் இருக்கிறார் என கூறியுள்ளார்.

உடனே வீட்டிற்கு விரைந்த அர்பதாவின் தந்தை, மகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், அர்பதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.