தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டோரை ஆதரித்து பகிரங்கமாக கருத்து வெளியிட்ட மௌலவி ஒருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சி ஐ டியினரால் கைது செய்யப்பட்டார் என அதிர்வு இணையம் அறிகிறது. வவுனியா செட்டிக்குளத்தை சேர்ந்த முகைதீன் முதாஜித் என்ற மௌலவியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்கொலைத்தாக்குதல்கள் தொடர்பில் கருத்து தெரிவித்து பின்னர் அதனை முகநூலில் இவர் வெளியிட்டிருந்தார். பின்னர் பொலிஸாரால் அவர் தேடப்பட்டபோது அவர் மக்கா சென்றதாக சொல்லப்பட்டது.இன்று அவர் நாடு திரும்பும்போதே கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணைகள் நடக்கின்றன.






