மணமேடையில் ஒன்லைன் கேம் விளையாடிய மணமகன்!

இளைஞர் ஒருவர் தனது சொந்த திரு­மண வைப­வத்தில் இணையம் மூல­மான வீடியோ கேம் விளை­யா­டிக்­கொண்­டி­ருந்த காட்சி அடங்­கிய வீடியோ இணை­யத்தில் வேக­மாகப் பர­வு­கி­றது.

தனக்கு அருகில் மண­மகள் அமர்ந்­தி­ருந்த போதிலும், மண­ம­கனின் கவனம் முழு­வதும் மேற்­படி ஒன்லைன் கேம் மீதே இருந்­தது.

திரு­மணப் பரிசு ஒன்று அவ­ருக்கு அளிக்­கப்­ப­டும்­போ­து­கூட அவர், அதை தட்டி விட்டு அவர் ஒன்லைன் கேம் விளை­யாட்டைத் தொடர்ந்தார்.

இந்தச் சம்­பவம் எங்கு நடந்­தது, எப்­போது நடந்­தது என்­பது குறித்த உறு­தி­யான தக­வல்கள் ஏதும் தெரி­ய­வில்லை.

இந்த வீடி­யோ­வுக்கு பலரும் நகைச்­சு­வை­யாக கொமன்ட் செய்து வரு­கின்­றனர்.

முதன் முதலில் இந்த வீடியோ டிக் டோக் அப்பில் தர­வேற்­றப்­பட்­டது.

பின்னர் பேஸ் புக், டுவிட்டர் உள்­ளிட்ட சமூக வலை­த­ளங்­க­ளுக்கும் பர­வி­யது.

PUBG (PlayerUnknown’s Battlegrounds) எனும் ஒன்லைன் கேம் விளை­யாட்டில் மேற்­படி மண­மகன் ஈடு­பட்­டி­ருந்தார். இந்த ஓன்லைன் கேம் 2017 டிசெம்பரில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.