ஐ.எஸ் அச்சுறுத்தல்! தீவிர பாதுகாப்பில் இலங்கை நாடாளுமன்றம்…

இலங்கை நாடாளுமன்றத்திற்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் மீது ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதனயடுத்து வெளிநாடுகளின் உதவியுடன் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும், எதிர்வரும் நாடாளுமன்ற அமர்விற்கு முன்னர் மேற்கொள்ளப்படவுள்ளது.

நாடாளுமன்ற பாதுகாப்பிற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

வெடிப்பொருட்களை அடையாளம் காணும் ஸ்கேனர் இயந்திரம் உட்பட ஏனைய அதி தொழில்நுட்பம் வாய்ந்த உபகரணங்கள் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தின் CCTV கமரா கட்டமைப்பின் தொழில்நுட்பங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.