இலங்கையின் குண்டுதாரிகள் காஸ்மீருக்கு வரவில்லை! இந்தியா

இலங்கையில் கடந்த 21ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல்களை நடத்திய தற்கொலைதாரிகள் எவரும் இந்திய காஸ்மீர் பகுதிக்கு வந்து சென்ற, ஆதாரங்கள் இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் இராணுவத் தளபதியை ஆதாரம் காட்டி இதனை த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

தமது நாட்டின் குடிவரவு தரவுகளை ஆராய்ந்தபோது தாக்குதல்தாரிகளின் பயணங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.

எனினும் அவர்கள் போலியான பெயர்களில் வந்து சென்றனரா? என்பது குறித்து தகவல்கள் தேடப்படுவதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

குண்டுத்தாரிகள், இந்தியாவின் காஸ்மீர் மற்றும் கேரளாவுக்கு சென்று வந்ததாக இலங்கையின் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க, வெளியிட்ட தகவல் தொடர்பிலேயே இந்திய இராணுவத்தளபதியின் பதில் வெளியாகியுள்ளது.