மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் இளையமகள் அக்ஷரா ஹாசன், தங்கள் பெற்றோரின் பிரிவு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
1988 ஆம் ஆண்டு நடிகை சரிகாவை காதல் திருமணம் செய்துகொண்ட கமல்ஹாசன் 2004 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.
பெற்றோரின் பிரிவுக்கு பின்னர் இளையமகள் அக்ஷராஹாசன் தனது தாயுடன் மும்பையில் வசித்து வந்தார். இந்நிலையில் இந்த பிரிவு குறித்து அக்ஷரா பகிர்ந்துகொண்டதாவது, எனது பெற்றோர் விவாகரத்து செய்துகொண்டது மிகுந்த வலியை ஏற்படுத்தியது.
உலகம் முடிந்துவிட்டது போன்று இருந்தது. அம்மாவுடன், அப்பா இல்லையே என்று தோன்றியது, ஆனால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள், எங்கள் வாழ்க்கையில் அது ஒரு அனுபவம். அப்படி ஒரு அனுபவம் தான் நாங்கள் இந்த அளவுக்கு வளர்ந்து நிற்பதற்கு உதவியாக இருந்துள்ளது என கூறியுள்ளார்.






