ஆணோ, பெண்ணோ முகநூலில் தேவையில்லாமல் உங்களுடைய உங்கள் குடும்ப உறுப்பினர்கள் புகைப்படங்கள் பதிவு இட வேண்டாம்.
2) தெரியாத நபர்களின் புகைப்படங்களுக்கு Like ,Comment, Shere இட வேண்டாம்.
3) ஆணோ பெண்ணோ தேவை இல்லாமல் முன் பின் தெரியாத நபரிடம். chating செய்ய வேண்டாம் பிரச்சினையின் ஆரம்பமே இங்கு தான் ஆரம்பம்மாகிறது.
4) யாரை நம்பியும் புகைப்படத்தை அனுப்ப வேண்டாம் யாரிடமும் புகைப்படத்தை நீங்களும் கேட்க கூடாது.
5) நீங்கள் புகைப்படம் அனுப்பும் உறுப்பினர் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தாலும் சில நேரம் எல்லோருக்குமே கவன குறைவு உண்டு அது போன்ற சில நேரங்களில் அது சில கயவர்களிடம் சென்று விட வாய்ப்பு உண்டு மறந்து விட வேண்டாம்.
6) யாராவது உங்களை மிரட்டினால் முதலில் அதை தாங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் தெரியப்படுத்துங்கள்.
7) ஆண்கள் பெண்கள் இருவருமே போலியான fake id களை உருவாக்கி பெண் ஆணையோ ஆண் பெண்ணையோ ஏமாற்றலாம்.
8) முகநூலில் உங்கள் தொலைபேசி எண் , மின் அஞ்சல், உங்கள் பிறந்த திகதி, முகவரி நீங்கள் படிக்கும் கல்லூரி முகவரிகளை உங்கள் சொந்த ஊர் போன்ற பிற தகவல்களை பிறர் பார்ப்பதை போதுமான அளவு தவிருங்கள்.
9) சமூக வலைதளங்களில் உறவு முறைகளை வைத்து தெரியாதவர்களிடம் பழுகுவதை கூடியமானவரை தவிருங்கள். எங்கும் ஒரு இடைவெளி வைத்து கொள்ளுங்கள்.
10) தெரியாதவர்களிடம் உங்கள் அந்தரங்க விடயங்களை உங்கள் குடும்ப பிரச்சினைகளை கூறாதிர்கள். அதே நேரத்தில் அவர்களுடைய விடயங்களையும் நீங்கள் கேட்காதிர்கள்.
11) ஆபாச புகைப்பட இனணப்புகள் வந்தால் அதனுள் போக வேண்டாம்.அவ்வாறு சென்றால் அந்த இணைப்பு உங்களின் நண்பர்களுக்கு சென்று நன்மதிப்பு கெடும்
12) உங்கள் நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்களின் பெயரில் தேவை இல்லாத செய்திகள் வந்தால் அவர்களிடம் உறுதி செய்து கொள்ளுங்கள்.
13) இத்தகைய தொழில்நுட்பங்களை உங்கள் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.
14) Face book whats up hackபண்ணுவது மிக மிக எளிது உங்கள் mobile நீங்கள் lock செய்து இருந்தாலும் Hack செய்யலாம்.
15)free recharge என்று link* வந்தால் அதில் போகாதீர்கள் சுலபமாக அவர்களுக்கு உங்கள் அனைத்து Data புகைப்படங்கள் போய் விடும்.
16) உங்கள் mobile memory space இருந்தாலும் உங்கள் இடம் 3g 4g நெட் வொர்க் இருந்தும் டக்குன்னு சூடானால் ஹாங் ஆனாலோ உங்கள் தரவுகளை யாரோ திருடுகிறார்கள் என்று அர்த்தம்