வவுனியா நகர் பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் ஒருவரை துரத்தி பிடித்த பொலிஸார்…

வவுனியா நகர் பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் ஒருவரை துரத்தி சென்று மடக்கி பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, இன்று காலை10.30 மணியளவில் வவுனியா பூந்தோட்டத்தில் இருந்து வவுனியா நகர் பகுதி நோக்கி தலைக்கவசம் இன்றி சென்ற இளைஞனை போக்குவரத்து பொலிஸார் துரத்தி சென்று குடியிருப்பு பகுதியில் வைத்து மடக்கி பிடித்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு RS ரக மோட்டார் சைக்கிளையும் குறித்த இளைஞனையும் அழைத்து சென்றுள்ளனர்.

தலைக்கவசம் இல்லாது சென்றதன் காரணமாகவே குறித்த இளைஞன் துரத்தி செல்லப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.