மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் இருக்கும் அந்தேரி ஜே.பி நகர் பகுதியை சார்ந்தவர் அம்மீத் அகர்வால். இவர் சிறிய ரகத்திலான விமானங்களை வாடகைக்கு விடும் பணியை செய்து வருகிறார்.
இந்த நபரின் மீது காவல் நிலையத்தில் அதே பகுதியை சார்ந்த மாடல் அழகி ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் தெரிவித்தாவது, அம்மீத் அகர்வாலுடன் எனக்கு கடத்த 2015 ம் வருடத்தில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது எங்களுக்குள் நாளடைவில் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்தவே, இருவரும் ஒரே இல்லத்தில் வசித்த வந்தோம்.
இந்த நேரத்தில் இவர்கள் இருவரும் தங்களின் காதலை உச்சக்கட்டத்திற்கு எடுத்து செல்ல ஆசைப்பட்டு உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த நிகழ்வுகளை அம்மீத் கைப்பேசியில் காட்சிகளாக பதிவு செய்து வைத்துள்ளார். இதனை அறியாத மாடல் அழகி அவருடன் சேர்ந்து வசித்து வந்த நிலையில், இந்த உண்மை அவருக்கு தெரியவந்துள்ளது.
இதனை அறிந்த மாடல் அழகி இது குறித்து அவரிடம் கேட்ட நிலையில், இதனால் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை அடுத்து, ஆபாச காட்சிகளை காண்பித்து தமது ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும், ஆசைக்கு இணங்காத பட்சத்தில், ஆபாச காட்சிகளை இணையத்தில் பரப்பி விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த மாடல் அழகி விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.