இன்றுள்ள நவநாகரீக காலத்தில் வாழ்ந்து வரும் நாம் நமது வாழ்க்கையில் பல விதமான முன்னேற்றங்களை கண்டு., அதன் மூலமாக பல அசாத்திய நிகழ்வுகளை செய்து வருகிறோம். அந்த வகையில் கிடைத்த வாய்ப்புகளை நாம் பயன்படுத்தி நம்மால் முடிந்தவற்றை செய்து வருகிறோம்.
ஆனால் நாம் வாழ்ந்து வரும் உலகில் எங்கோ ஒரு இடத்தில் நம்மை வருத்தப்பட வைக்க கூடிய நிகழ்வுகள் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில்., பல நாடுகளில் பல்வேறு துயரங்களின் காரணமாக மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.
ஒரு இடத்தில் விபத்தில் மற்றொரு இடத்தில் மற்றொரு காரணம் என்று பல்வேறு விதமான விபத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் பரிதாபமாக மக்கள் உயிரிழந்திருப்பதை அறிந்து நாம் நமது வருத்தத்தையும்., இரங்கலையும் தெரிவித்து வருகிறோம்.
அதனைப்போன்று ஆப்பிரிக்க நாட்டில் உள்ள காங்கோ மாகாணத்தின் மத்திய பகுதியில் எபலோ வைரல் தாக்குதலானது கடந்த வருடத்தில் ஏற்பட்டது. இந்த வைரஸ் தாக்குதல் கடந்த வருடத்தின் ஜூலை மாதம் முதல் தனது உக்கிரத்தை காட்ட துவங்கியது.
தற்போது வரை சுமார் 600 பேர் பலியாகியுள்ளதாகவும்., சுமார் 1000 ற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும்., சுமார் 70 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு நோய் மேலும் பரவாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 2014 ம் வருடத்தில் இந்த எபலோ வைரல் தாக்குதலில் சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததை அடுத்து., தற்போது மக்களுக்கு வழங்கப்பட்ட விழிப்புணர்வு மற்றும் பிரசாரத்தின் மூலமாகவும்., ஐ.நா சபையின் உதவி மூலமாக மக்களின் உயிர் காக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






