தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு? வீடியோ வெளியிட்ட சமந்தா.!

இன்று இந்தியாவின் 17வது மக்களவை தேர்தல் நடைபெறுவதை அடுத்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று ஆந்திர மாநிலம், அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், பிஹார், சத்தீஸ்கார், ஜம்மு காஷ்மீர், மகாராஸ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிஸா, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

18 மாநிலங்களிலும், 2 யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 91 தொகுதிகளுக்கு நடைபெறும் இன்றைய தேர்தலில் 14.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரையிலும்நடக்கிறது. தேர்தல் நடக்கும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த தேர்தலில் ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ரெபல்லே சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும், தற்போதைய எம்.எல்.ஏ-வாக இருக்கும் தெலுங்கு தேச கட்சி வேட்பாளருமான அனகனி சத்ய பிரசாத்துக்கு நடிகை சமந்தா ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதற்கான வீடியோவை வெளியிட்ட சமந்தா, இரு தினங்களுக்கு முன்னர் டுவிட்டரில் சத்ய பிரசாத்துக்கு ஆதரவாக பதிவு செய்துள்ளார்.