இந்தியா ஒரு கிருஸ்துவ நாடு.!! இந்து என்ற ஒரு மதமே இல்லை.!!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடக்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும், தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி மதசார்பற்ற கூட்டணி என்றும், திமுக எந்த மதத்திற்கும், எந்த சாதிக்கும் எதிரானது இல்லை என்றும் திமுக தலைவர் தனது பிரச்சாரத்தில் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள இசிஐ என்ற கிறிஸ்தவ அமைப்பின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் ஒரு தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், இந்தியா ஒரு கிருஸ்துவ நாடு என்றும், இந்து என்ற ஒரு மதமே இல்லை என்றும் தெரிவித்து இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரான பேராயர் எஸ்றா சற்குணதிற்கு தமிழகத்தில் சொந்தமாக ஏகப்பட்ட தேவாலயங்கள் உள்ளன. இந்த தேவாலயங்கள் மூலம் கிருஸ்துவ மதத்தை தமிழகத்தில் பரப்பி வரும் இவர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதில், இந்தியாவில் இந்து முன்னணி என்ற அமைப்பு தீவிரவாதத்தை ஊக்குவிக்கக் கூடியது. அந்த அமைப்பை தடை செய்ய வேண்டும். இந்தியா ஒரு கிறிஸ்தவ நாடு. 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்து என்ற ஒரு மதமேகிடையாது என்று பேசிய எஸ்றா சற்குணம் தற்போதும் திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த 2014 ஆம் ஆண்டு இதே பேராயர் எஸ்றா சற்குணம் ”ஈழத்தமிழர்களை படுகொலை செய்தது இலங்கை ராணுவம் அல்ல.. விடுதலைப்புலிகள்தான்” என்று கூறியதும், இதனால் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் இவரை வீட்டை முற்றுகையிட்டு கைதியானதும் குறிப்பிடத்தக்கது.

நான் எந்த மதத்திற்கும் எதிரானவன் இல்லை என்று ஸ்டாலின் சொல்லி ஒரே நாளில், ஒருவர் இந்து மதமே இல்லை என்று குரல் எழுப்புகிறார். இது என்ன கூட்டணியோ…? தலையில் அடித்து கொண்டே நகர்ந்தார் அந்த மதசார்பற்ற கட்சி தலைவரின் தொண்டர்.