வட சென்னையை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் தந்தை வாட்டர் கேன் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வாட்டர் கேனை ஆட்டோவில் எடுத்து செல்ல 28 வயது நிறைந்த ஆட்டோ டிரைவர் கோபி என்பவர் சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் சிறுமிக்கும், கோபிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இவர்களது நட்பு காதலாக மாறிய நிலையில் கோபி அந்த சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி தனியாக அழைத்து சென்றுள்ளார். மேலும் அவருக்கு தாலி கட்டி,அவரை ஏமாற்றியுள்ளார்.
அதனை தொடர்ந்து வீட்டிற்கு திரும்பிய சிறுமி யாருக்கும் தெரியாமல் தனது தாலியை 10 நாட்களுக்கும் மேலாக மறைத்து வைத்துள்ளார். இந்நிலையில் திடீரென்று சிறுமியின் தாயார் சிறுமி மறைத்து வைத்திருந்த தாலியை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்துள்ளார்.
பின்னர் நடந்த அனைத்தும் தெரிந்து கொண்ட தாயார் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
மேலும் ஏற்கனவே திருமணமாகி சிறுமியை ஏமாற்றிய கோபி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.






