வருகிற 18-ஆம் தேதி பெங்களூர் நகரில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்கான பாதுகாப்பு பணிகள் குறித்து போலீசார் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும், காவல் அதிகாரிகள் வாக்குச்சாவடி மையங்களில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.
காவல் அதிகாரிகள் எப்படி செயல்பட வேண்டும் என ஐந்து பக்கங்கள் கொண்ட புத்தகத்தை தயாரித்து வெளியிட்டு உள்ளனர். இந்த புத்தகத்தின் நகல்கள் அந்தந்த காவல் நிலைய அதிகாரிகளின், வழியாக அனைவரது செல்போன்களுக்கும் அனுப்பப்பட இருக்கிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி அவர்களது சின்னமாக கை சின்னத்தை பயன்படுத்தி வருகின்றது. வாக்குச்சாவடி அருகே சின்னத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது என்பது தேர்தல் விதிமுறை ஆகும்.பொதுவாக போலீசார் அனைவரும் வாகனங்களை நிறுத்தும் பொழுது கைகாட்டி வாகனங்களை நிறுத்துவர்.
இவ்வாறு காவல்துறையினர் கைகாட்டி வாகனங்களின் நிறுத்தினால் அது காங்கிரஸ் கட்சியை குறிப்பது போன்றது. எனவே, தேர்தலின் பொழுது பணியில் ஈடுபடும் அதிகாரிகள் வாகனங்களை நிறுத்த கையை பயன்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.






