தினகரன் ஆதரவு வேட்பாளர் மீது வழக்கு பதிவு.!

வரும் மக்களவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் வேட்பாளரை களமிறக்கி போட்டியிட உள்ளது. மேலும் அனைத்து சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் தினகரன் ஆதரவு வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

இதில், பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரன் ஆதரவு சுயேட்சை வேட்பாளர் கதிர்காமு, மீது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டு, புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.

பெரியகுளம் சுயேட்சை வேட்பாளரும், மருத்துவருமான கதிர்காமுவிடம் சிகிச்சை பெற வந்த சிறுமிக்கு, அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக, அந்த சிறுமியின் குடும்பத்தார், பெரியகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

இதனையடுத்து கதிர்காமு மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள ரகசிய பேட்டியில், தன மீது சுமத்தப்பட்ட குற்றம் பொய் என்பதை தான் நிரூபிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.