மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு….

தற்போதைய வாழ்கை முறையில் குடிப்பழக்கத்தை பெரும்பாலானோர் வைத்துள்ளனர். தமிழகத்தில் மதுக்கடையை அரசாங்கமே விற்பனை செய்வது தான் வேடிக்கைக்குரிய விஷயம். தமிழகத்தில் ரேசன்கடை கூட ஒவ்வொரு ஞாயிறு அன்று விடுமுறை விடுமுறை விடப்படுகின்றது. ஆனால் வாரத்தில் ஏழு நாட்களும் டாஸ்மாக் திறந்து வைக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதியம் 12:00 மணிக்கு திறக்கப்படுகிறது. ஆனால் குடிமகன்கள் அதிகாலையில் இருந்தே டாஸ்மாக் வாசலில் குவிந்து கிடக்கின்றனர்.

டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மதுபானங்கள் திருட்டுத்தனமாக விற்கப்படுகிறது. தற்போதைய வாழ்க்கைமுறையில் மது குடிப்பதனால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. மதுவை ஒழிக்க நீண்ட நாட்களாக பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்பொழுது சில பெண்களும் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி விட்டனர். படிக்காதவர்கள் தான் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர் என்பதெல்லாம் முற்றிலும் பொய்யானது. படித்து பட்டம் பெற்ற பலர் இந்த பழக்கத்திற்கு அடிமையாய் உள்ளனர்.

குடிப்பழக்கத்திற்கு இளைஞர்கள் தான் அதிக அளவில் அடிமையாகி உள்ளனர். இளைஞர்கள் குடிக்கும் போது போதை ஏறுவதை விரும்புகின்றனர்.. ஆனால் அது அவர்களின் மரணத்தை நோக்கி செல்கிறது என்பது தான் உண்மை. இரவில் மது அருந்திவிட்டு அதிகாலையில் உணவு உண்ணாமல் இருப்பது உயிருக்கு பெரும் ஆபத்தானதாகும். இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து அவ்வாறு செய்து வந்தால் குடற்புண் ஏற்படும். அதனையும் கண்டுகொள்ளாமல் விட்டால் அது கேன்சரில் கொண்டே விட்டுவிடும்.

குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அதிகாலையில் மயக்கம், வாந்தி, பசியின்மை, படபடப்பு போன்ற அறிகுறிகள் வந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறாவிட்டால் உயிர் போகும் நிலை உண்டாகும். மது பழக்கத்தை விட்டுட்டு ஒரு வாரத்திற்கு வெள்ளை பூசணிக்காயை சிறிது சிறிதாக துண்டாக்கி மிக்சியில் போட்டு அடித்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் படபடப்பு உடனடியாக நீங்கிவிடும். அதன்பிறகு ஒருவாரத்திற்கு மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும். ஆனால் அதன்பிறகு மதுபழக்கத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.