திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி இல்லாத தேர்தல் மிகுந்த மனவருத்தமாக இருப்பதாக அவரது மகள் மு.க.செல்வி வேதனை தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதில் மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக தயாநிதி மாறம் களமிறங்குகிறார்.
அவரை ஆதரித்து திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகளும், மு.க ஸ்டாலினின் சகோதரியுமான செல்வி பிரசாரம் செய்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தயாநிதி மாறன் வெற்றி பெறுவார்.
திமுக தலைவரும் எனது அப்பாவுமான கருணாநிதி இல்லாத இந்தத் தேர்தல் மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.