திருப்பத்தூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுந்தரவேல், அவரது மனைவி உட்பட 3 பேர் உயிரிழப்பு. வேலூர் ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த சுந்தரவேல் 1991 முதல் 1996 வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தற்போது திருப்பத்தூர் அமமுக நகர செயலாளராக இருந்து வந்தார், சுந்தரவேல்.
ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி செல்லும் வழியில் லாரி மீது சுந்தரவேல் சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டது. லாரியின் அடியில் சிக்கியிருக்கும் காரை மீட்கும் பணி காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.