தென்னாப்பிரிக்காவில் 27 வயதான தாய் தனது குழந்தைகள் கேஎப்சி சிக்கனை சாப்பிட்டதால் கோபம் கொண்டு இரும்பு கம்பியால் சூடு வைத்து கொடூர தண்டனை வழங்கியுள்ளார்.
5 மற்றும் 7 வயதுடைய குழந்தைகள் கையில் ரத்த காயங்களுடன் பள்ளிக்கு சென்றுள்ளனர். இதனைப்பார்த்த ஆசிரியர் இரண்டு குழந்தைகளுக்கும் முதலுதவி அளித்துள்ளார்.
பின்னர் குழந்தைகளிடம் நடத்திய விசாரணையில், தாயின் கேஎப்சி சிக்கனை எடுத்து சாப்பிட்டதால் கோபம் கொண்டு இரும்பு கம்பியை எடுத்து கைகளில் சூடு வைத்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர் குழந்தைகளின் தந்தையை பள்ளிக்கு அழைத்து புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், தனது மனைவியை விட்டு தான் பிரிந்து வாழ்வதாகவும், குழந்தைகள் தனது தாயுடன் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து குழந்தைகளை உடல்ரீதியாக துன்புறுத்திய தாய் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொலிசில் பள்ளி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது,